Loading...
 

நகைச்சுவையான சொற்பொழிவு பேட்டி

 

Vietnam 4084327 960 720

 

சொற்பொழிவு கால அளவு

நகைச்சுவையான சொற்பொழிவுப் போட்டி சிறந்த நகைச்சுவையாளர்கள் மற்றும் பொழுதுபோக்காளர்களைக் கண்டுபிடிக்கும் நோக்கத்தைக் கொண்டுள்ளது.

நகைச்சுவையான சொற்பொழிவுப் போட்டியில் பங்கேற்கும் சொற்பொழிவுகள் அதிகபட்சமாக 7 நிமிடங்கள் இருக்க வேண்டும்.

நடுவர்களின் தேர்வு

நாடு மற்றும் அதற்கு மேல் மட்டங்களில் நடைபெறும் போட்டிகளை பொறுத்தவரையில், நீதிபதிகள் Agora அல்லாத உறுப்பினர்களாகவும் பின்வரும் தொழில்களை செய்பவர்களாகவும் இருப்பார்கள்:

  • ஊடக வல்லுநர்கள் - தொலைக்காட்சி, வானொலி, பத்திரிகை அல்லது திரைப்படத் துறையில் இருக்கும் தொகுப்பாளர்கள், நிகழ்ச்சி வர்ணனையாளர்கள், நடிகர்கள், தயாரிப்பாளர்கள், முதலியன.
  • நகைச்சுவை நடிகர்கள்.
  • தொழில்முறை கோமாளிகள், கலைஞர்கள் மற்றும் மைம்ஸ்.
  • புனைகதை எழுத்தாளர்கள்.
  • பத்திரிகையாளர்கள்.
  • தொழில்முறை ரீதியாக (ஊதியத்திற்காக) பொது சொற்பொழிவாற்றும் நெட்வொர்க்கில் இருக்கும் பேச்சாளர்கள்.
  • STEDx., மங்க் விவாதங்கள் போன்ற பிற பொது சொற்பொழிவாற்றும் நிகழ்ச்சிகளின் பேச்சாளர்கள்.

பேச்சாளர்களுக்கு மதிப்பெண் வழங்குவது

பின்வரும் அளவுகோல்களின்படி நீதிபதிகள் பின்வருமாறு சொற்பொழிவுகளுக்கு மதிப்பெண் வழங்குவார்கள்:

  • அசல் தன்மை (0 முதல் 10 வரை)
    மொழியின் பயன்பாடு (0 முதல் 10 வரை) -
    பயன்படுத்தப்படும் மொழியின் வளம், வெளிப்படுத்தும் விதம் மற்றும் தெளிவு ஆகியவை கருத்தில் கொள்ளப்படும்
  • உடல் பாவனையின் பயன்பாடு (0 முதல் 10 வரை) - பேச்சாளரின் உடல் பாவனையின் செழுமை மற்றும் வெளிப்பாடு, மேலும் அது நகைச்சுவையான விஷயத்தை வலுப்படுத்தியதா, பேச்சுடன் அது ஒத்திசைவாக இருந்ததா போன்ற விஷயங்கள் இதில் கருத்தில் கொள்ளப்படும்.
  • கருவிகள் அல்லது காட்சி உபகரணங்களின் பயன்பாடு (0 முதல் 10 வரை) - சொற்பொழிவில் நகைச்சுவையைப் பெருக்குவதற்கு காட்சி உபகரணங்கள் அல்லது கருவிகள் எவ்வளவு பயனுள்ளதாக இருந்தன ஆகிய விஷயங்கள் கருத்தில் கொள்ளப்படும்.
  • நகைச்சுவை உள்ளடக்கம் (0 முதல் 10 வரை) - சொற்பொழிவு எவ்வளவு வேடிக்கையாக இருந்தது என்பது கருத்தில் கொள்ளப்படும்.
  • பார்வையாளர்களின் வரவேற்பு (0 முதல் 10 வரை) - பார்வையாளர்கள் பேச்சாளரின் நகைச்சுவையை எப்படி வரவேற்றார்கள் என்பது கருத்தில் கொள்ளப்படும்.

ஒவ்வொரு சொற்பொழிவுக்கும், மேற்கூறிய மதிப்பெண்களின் சராசரி கணக்கிடப்படும், அதுவே அந்த போட்டியாளருக்கு கொடுக்கப்படும் இறுதி மதிப்பெண்ணாகும்.

குறிப்பு: கருவிகள் அல்லது காட்சி உபகரணங்களின் பயன்பாடு விருப்பத்திற்குரியது, பங்கேற்பாளர் ஏதேனும் கருவிகள் அல்லது காட்சி உதவிகளைப் பயன்படுத்தவில்லை என்றால், சராசரியைக் கணக்கிடும் போது அந்த வகை விலக்கப்படும்.

தலைப்புகள்

உலக இறுதிப் போட்டியைத் தவிர வேறு ஏதேனும் மட்டத்தில் வெற்றி பெற்றவருக்கு "(பிராந்தியம்) -இன் சிறந்த நகைச்சுவை பேச்சாளர்" என்ற பட்டம் கிடைக்கும்.

 


Contributors to this page: shahul.hamid.nachiyar and agora .
Page last modified on Thursday October 21, 2021 20:36:58 CEST by shahul.hamid.nachiyar.